web log free
April 06, 2026

முன்னாள் தளபதிகளுக்கு கௌரவ பதவி

முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுப்பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக ஆகியோருக்கு கௌரவ பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த கௌரவ பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, முன்னாள் கடற்படை தளபதி ஓய்வுப்பெற்ற அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் தி பீல்ட் என்ற நிலைக்கு பதவியுயர்வு பெற்றுள்ளார். அத்துடன், முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக மார்ஷல் ஒப் தி எயார்போர்ஸ் என்ற நிலைக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd