web log free
October 25, 2025

முன்னாள் வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரம்

பிரபல றக்பி வீரர் வசிம் தாஜூதீன் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை அழித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமர சேகரவுக்கு எதிராக சட்ட மா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றபத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

வெள்ளவத்தை முருகன் வீதியை வசிப்பிடமாக கொண்ட றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், நாரஹேன்பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து, 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரெனத் தீப்பற்றி எரிந்ததில், அவர் மரணமடைந்துவிட்டதாக அந்தக் காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.

அவருடைய சடலம், மறுநாள் 17ஆம் திகதியன்று, காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd