இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தன்னுடைய மகன் ஜீவன் தொண்டமானை, நேரடியாக பாராளுமன்றத்துக்கு இறக்கி விடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கான காய் நகர்த்தலை, முன்னெடுத்திருக்கும் தொண்டமான், வெற்றிடமாக இருக்கும், தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கு குறி வைத்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை, சாந்த பண்டார இராஜினாமா செய்து, நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளார்.
குருநாகல் எம்.பியான, மறைந்த சாலிந்த திஸாநாயக்கவின் வெற்றிடத்துக்கே, சாந்த பண்டார தெரிவுசெய்யப்படவுள்ளார்.
இந்நிலையிலேயே தொண்டமான காய்நகர்த்தலை முன்னெடுத்துள்ளார்.
இது தொடர்பில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு தூதுவிட்டு கலந்துரையாடி வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.