ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் உள்ளிட்ட அந்த குழுவினருக்கு சொந்தமான 113 கோடி ரூபாய் பெறுமதியான நிதி மற்றும் சொத்துக்கள் கைவிடப்பட்டுள்ளன என குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று (08) அறிக்கையிட்டு அதுதொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
அதனடிப்படையில் 100 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், 13 கோடி ரூபாய் நிதி மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகிய கைவிடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்டுள்ள 100 கோடி ரூபாய் சொத்துகளில் வாகனம், வீடு, கைத்தொழிற்சாலை, தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவையும் அடங்குகின்றன.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் பயங்கரவா குழுவின் உறுப்பினர்கள் 60 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பெண்களும் அடங்குகின்றனர
அவர்களில் கொஞ்சபேர், தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.