web log free
April 06, 2026

கோட்டா-மைத்திரி சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடு திரும்பியதும் அவருக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ, நாளை ஞாயிறுக்கிழமை அறிவிக்கப்படவுள்ளார். இந்நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் ஓர் அங்கமாகவே, கோத்தாபய ராஜபக்ஷவுடனான சந்தி்ப்பு இடம்பெறவுள்ளது என அறியமுடிகிறது. 

Last modified on Saturday, 10 August 2019 12:38
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd