web log free
March 17, 2026

ஜனாதிபதியுடன் சென்றிருந்த சு.க பட்டாளம்


பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் ஒருதொகுதியினர் சென்றுள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, நிஷாந்த முத்துஹெட்டிகம, லசந்த அழகியவண்ண, சாரதி துஷ்மந்த, லக்ஷ்மன் பெரேரா, அங்கஜன் ராமநாதன் மற்றும் ஸ்ரீயானி விஜயவிக்ரம ஆகியோரே இவ்வாறு சென்றுள்ளனர்.


இந்நிலையில், அரசாங்கத் தூதுக்குழுவில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளானோரை, ஜனாதிபதி எவ்வாறு அழைத்துச் செல்லமுடியுமென, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd