ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு, சுகததாஸ உள்ளக அரங்கில், மாலை 3 மணிக்கு நடத்துவதற்கு ஏற்பாடாகியிருக்கிறது.
இந்நிலையில், அந்த பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள போவதாக அறிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயரதிகாரியுடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இந்த சந்திப்பு நேற்றுக்காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மத்திய மற்றும் தெற்காசியாவின் அமெரிக்க உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் அவர்களே, மஹிந்த தலைமையிலான குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இதன் போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸூம் உடனிருந்தார். அத்துடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி டெப்லிட்ஸும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.