அமைச்சரவை கூட்டமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை ஆரம்பமானது.
முற்பகல் 7.30 மணிக்கு அமைச்சரவை ஆரம்பமான போது, ஐந்து அமைச்சர்கள் மாத்திரமே வந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தூர இடங்களில் இருந்து வரும் அமைச்சர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில்கொண்டு அமைச்சரவை கூட்டத்தை முற்பகல் 8.30 மணிக்கு நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அண்மையில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “வழமையாக முற்பகல் 9.30 மணிக்கு அமைச்சரவை கூடிய நிலையில் தற்போது முற்பகல் 7.30 மணிக்கு கூடுகின்றது.
இதன்போது, ஐந்து - ஆறு அமைச்சர்களே வருகை தருகின்றனர். இதனை பார்க்கும்போது, பகல்பொழுது வரை உறங்குபவர்கள் நாட்டில் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது விளங்குகின்றது.” என்று கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.