web log free
December 02, 2023

புறாவை எதிர்த்து கழுகை களமிறக்கவும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கும் காட்டுப்புறாவை எதிர்த்து, காடைக்கோழியை களமிறக்காது, கழுகை களமிறக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் துமிந்த பண்டார நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காட்டுப்புறாவை எதிர்த்து காடைக்கோழியை களமிறக்கினால் எவ்விதமான போட்டியும் இருக்காது. காட்டுப்புறாவான பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிடக்கூடிய ஒரேயொரு கழுகு வேட்பாளர், எமது கட்சியில் இருப்பவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸா என தெரிவித்துள்ள அவர், சஜித்தையே களமிறக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.

தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.