web log free
December 02, 2023

மன்னாருக்கு விசேட ரயில் சேவை

மன்னார், மடு அன்னையின் வருடாந்த திருவிழாவுக்கு செல்லும் பக்கதர்களின் நலன்கருதி விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இருந்த இன்று காலை 7.30 மணிக்க குறித்த ரயில் புறப்பட்டதுடன், பிற்பகல் 3 மணி அளவில் மடு ரயில் நிலையத்தை அண்மித்துள்ளது.

இதேவேளை, நாளை மாலை 4.30 க்கு மடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் குறித்த விசேட ரயில் இரவு 12.30 க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுளது