முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமைக்கான ஆவணங்களை கேட்டால் அதனை ஒப்படைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை குறித்து, அமைச்சரவை அந்தஸ்தில்லாத அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, டுவிட்டரில் பதிவிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நாமல் ராஜபக்ஷ இதனை பதிவிட்டுள்ளார்.
“SLPP வேட்பாளரைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவரது ஆவணங்கள் தொடர்பில் பிரச்சினை என்றால், தேவைப்பட்டால் அதனை முன்வைப்போம். நீங்கள் யாரை போட்டியிட வைக்கலாம் என்று கவலைப்படுங்கள்” என, நமல் ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த வாரம் அறிவித்தது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை தனது ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவில்லை.