உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய, தேசிய தௌஹீத் ஜமாஆத் அமைப்பின் தலைவர் என கூறப்படும் மொஹமட் சஹ்ரானின் மனைவி, அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலமொன்றை இன்று (15) அளித்துள்ளார்.
மொஹமட் சஹ்ரான் மற்றும் மொஹமட இப்றாஹிம் அஹமட் ஆகியோரின் மரண விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போதே, கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், இவ்வாறு இரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த மரண விசாரணையின் போது, சஹ்ரானின் மனைவி, அவருடைய மகளான நான்கு வயதான சஹ்ரான் ரெகசியா, தற்கொலை தாரியான மொஹமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரின் தந்தையான் இப்ராஹிம், சகோதரரான இல்ஹாம் அஹமட் மற்றும் மொஹமட் இப்ராஹிம் இஸ்மைல் அஹமட் ஆகியோரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.