பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரண்டு முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த முறைப்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடுகளை பாரப்படுத்தியுள்ளார்.
முதலில் அவ்வாறு ஒப்படைக்கப்பட்டாலும், அதன் பின்னர் அந்த விசாரணைகள் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
கோத்தாபய ராஜபக்ஷ, வெளிநாட்டு பிரஜையாக இருக்கும் போது, புதிதாக தேசிய அடையாள அட்டையை பெற்று, புது கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டது எவ்வது என்பது தொடர்லேயே முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன என, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது சாதாரண நடைமுறையாகும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.