web log free
May 08, 2026

சஹ்ரானிடம் பயிற்சிபெற்ற மற்றுமொருவர் கைது

ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீம் குழுவின் இரண்டாம் நிலை தலைவரான நௌவ்பர் மௌலவியின் மகனான மொஹமட் நௌபர் அப்துல்லா (16) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் சஹ்ரானின் நுவரெலியா பயிற்சி முகாமில் பயிற்சிப்பெற்றவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் அம்பாறையில் வைத்து இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd