web log free
March 20, 2026

முன்னிலை சோஷலிச கட்சியும் களமிறக்குகிறது

முன்னிலை சோஷலிச கட்சியினரால் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி தரப்பினரால் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே முன்னிலை சோஷலிச கட்சியும் வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் முன்னிலை சோஷலிச கட்சி தமது வேட்பாளர் தொடர்பாக அறிவிக்கவுள்ளது.

2012ஆம் ஆண்டில் ஜே.வி.பியிலிருந்து குமார் குணரட்னம் தலைமையில் வெளியேறிய குழுவொன்று முன்னிலை சோஷலிச கட்சியை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd