web log free
March 28, 2026

கூட்டணி தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய கூட்டத்தில் புதிய கூட்டணி ஓப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் நாள் குறித்து முடிவெடுக்கப்படும். அத்துடன் கூட்டணியின் யாப்பு தொடர்பாகவும், இணக்கப்பாடு எட்டப்படும்.

ஓப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் நாளன்று, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd