web log free
July 02, 2025

நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுதல், புதிய கூட்டணி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

நாடாளுமன்ற குழுக் கலந்துரையாடலின் பின்னர், ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ளனர்.

முன்னதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை சந்திக்கவிருந்த நிலையில், அந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த வாரம் இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன

இதற்கமைய அந்த சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd