web log free
April 06, 2026

சஹ்ரானின் சகாக்கள் இருவர் கைது

இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாஅத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் சூத்திரதாரியான, இலங்கையில் தடை செய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரானிடம் பயிற்சிப்பெற்ற குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் சஹ்ரானிடம் குறித்த இருவரும் ஆயுத பயிற்சி பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அம்பாறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd