உயிர்பிழைத்து வாழ்வோருக்கு அச்சுறுத்தல்
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை, புதிய இராணுவத் தளபதியாக நியமித்திருக்கின்றமை, உயிர் பிழைத்து வாழ்வோருக்கு கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (20) தெரிவித்துள்ளது. ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து , தூதரகங்கள் மற்றும் ஐக்கிய இரா ஜ்ஜிய உயர்ஸ்தானிகராலயம், நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்து தூதர கங்கள் ஆகியவற்றுடனான உடன்படிக்கையின் பிரகாரம் பின்வ ரு ம் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு வெளியிட்டது. மனித உரிமை மீறல் தொடர்பான பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியிருக்கும் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை, இலங்கை இராணுவ தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரதான ஆளுநர் மிச்செல் பெசெலேலின்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரதான ஆளுநர் மிச்செல் பெசெலேலின்; நிலைப்பாட்டை நாமும் பகிர்ந்து கொள்கின்றோம். லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு, இராணுவத் தளபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றன தொடர்பில் 2019மார்ச் மாதத்திலும் இலங்கை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சம்மேளனத்துக்கு வழங்கியிருந்த கடமைப்பாடு தொடர்பில் தற்போது சிக்கல் நிலை தோன்றியுள்ளன. அத்துடன், தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் இலங்கை காண்பிக்கும் முயற்சிகளை குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொது மக்களுக்கும் கவலையளிக்கும் தகவலை வழங்குவதாக அமைந்துள்ளது