வருமானவரி செலுத்துவோரின் பிள்ளைகளை, தேசிய பாடசாலைகளில், முதலாம் தரத்துக்கு உள்வாங்கிக் கொள்ளும் போது, விசேட கவனம் செலுத்துவதற்கு, கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்கத்துக்கு வருமான வரி செலுத்தும் நபர்களை மேம்படுத்தும் வகையில், அவர்களின் பிள்ளைகளை, தேசிய பாடசாலைகளில் உள்ளீர்த்துக்கு கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலேயே இந்த நடைமுறையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில் தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்ககொள்ளும் போது, தேவையான கட்டளைவிதிகளை தயாரிக்கும் போது, வருமானவரி திணைக்களத்தின் உதவியையும் பெற்றுக்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.