ஏழுநாட்கள் காலக்கெடு விதித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை அவர், தூக்கி குப்பைக்கூடைக்குள் போட்டுவிட்டார் என அறியமுடிகின்றது.
55 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அந்தக் கடிதத்தை கடந்த 19ஆம் திகதியன்று பிரதமரிடம் கையளித்திருந்தனர் என்பது தெரிந்ததேயாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழான புதிய கூட்டணிக்கு ஆதரவளித்து சகலரும் ஒன்றாக கைகோர்த்துகொண்டு பயணிக்கவேண்டும் என்ற நோக்கிலேயே அவர் இவ்வாறு செய்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஆகையால், கடிதம் கொடுத்த உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கு இடையில் மேற்படி விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இப்போதைக்கு இடம்பெறாது என அறியமுடிகின்றது.