உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரதானமாகப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். அவரை ஏன்? தெரிவுக்குழுவுக்கு அழைக்கவில்லை என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க கேள்வியெழுப்பினார்
நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையைக் காலந்தாழ்த்தும் நோக்கிலேயே, ஜனாதிபதிக்கு இதுவரையிலும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், விசேட தெரிவுக்குழுவின் காலத்தை நீடிப்பது தொடர்பான யோசனை, ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விவாதிக்கத் தேவையில்லை என்றார்.