web log free
November 27, 2024

முஸ்லிம்கள் இருவரும் அமைச்சர் கேட்டு அடம்பிடிப்பு

 

தங்களுடைய அமைச்சர் பதவிகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் இருவரும் தங்களுடய அமைச்சர் பதவிகளை மீறவும் கேட்டுஅடம்பிடிக்கின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று (22) நடைபெற்றது. இதன்போதே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், பைசஸ் காசிம் சுகாதார இராஜாங்க அமைச்சர் பதவியையும், அலிசாஹிர் மௌலான, ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பதவியையும் கேட்டுள்ளனர்.

அவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக பரிந்துரைகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை,ஸ்ரீ லங்கா முஸலிம் காங்கிரஸின் ஹாரிஸ் பிரதி அமைச்சர் பதவியைக் கேட்டுள்ளார் என்றும் அதுதொடர்பிலான தீர்மானத்தை  இன்னும் மூன்று வாரங்களுக்குள் அறிவிப்பதாக, ஹக்கீம் தெரிவித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு பின்னர், அதன் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், ஆளும் கட்சியிலிருந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தங்களுடைய பதவிகளை கூட்டாக பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அதன்பின்னர், இருவரை தவிர ஏனையோர், அவ்வப்போது, தங்களுடைய அமைச்சுப் பொறுப்புகளை மீளவும் பொறுப்பேற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd