நான்கு மாதங்களுக்கு முன்னர் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து, நாட்டுக்குள் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று மீண்டும் அமுல்படுத்தினார்.
ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்படும் அவசரகாலச்சட்டம், ஜுலை 22ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டது.
என்றாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படவில்லை. அதுதொடர்பிலான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில், ஜனாதிபதி இதுவரையிலும் கைச்சாத்திடவில்லை என அறியமுடிகின்றது.
அவ்வாறானதொரு எந்தவிதமான வர்த்தமானி அறிவித்தலும் இதுவரையிலும் அரச அச்சக்கூட்டுத்தாபனத்துக்கு கிடைக்கவில்லை என அறியமுடிகின்றது.