பாராளுமன்றத்தில் வழுக்கி விழுந்தோரின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
அதில், பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர், ஊழியர்கள் 14 பேரும், வெளியிலிருந்து வருகைதந்திருந்தவர்களில் நால்வரும் வழுக்கி விழுந்துள்ளனர்.
அவ்வாறு விழுந்தவர்கள் பாராளுமன்ற வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத்தில் முதலாவது மாடியிலேயே இவ்வாறான சம்பவம் fடந்த 20 ஆம் திகதி முதல் இடம்பெற்றுள்ளது.
முதலாவது மாடியின் கீழ் தரையை சுத்தப்படுத்துவதற்கான ஒருவகையான பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பதார்த்தம் தவறானது என்பதனால் வழுக்கும் தன்மையில் அந்த தரை இருக்கிறது.
அந்த வழுக்கும் தன்மையை இல்லாமல் செய்வதற்கு இன்னும் சில திரவியங்கள், பதார்த்தங்கள் போடப்பட்டாலும், வழுக்கும் தன்மை நேற்று நள்ளிரவு வரையிலும் அகற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக, வழுக்கும் இடங்களில், எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில், இவ்விடங்களில் வழுக்கும் ஆகையால் கவனமாக பயணிக்கவும் என அந்த பலகைகளில் எழுதப்பட்டுள்ளன.