web log free
April 06, 2026

இஸ்லாம் கற்பித்தவர் கைது

 

தடை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாஆத் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினர் ஒருவர், மாவனெல்ல முதுரனவெல பிரதேசத்தில் வைத்து, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் இன்று (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

59 வயதான அந்த நபர், இஸ்லாம் பாடத்தை கற்பிப்பவர் என விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது. 

ஏப்ரல் 21 ஆம் திகதியன்று, கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதற்கு மேற்படி நபர் ஒத்துழைப்பு நல்கியுள்ளார் என விசாரணைகளிலிருந்து அறியமுடிந்துள்ளது. 

அந்த நபர் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டார் எனவும் விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd