இலங்கையில் தற்போது அமலில் உள்ள முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ள போதிலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சட்டத் திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த 20ஆம் தேதி கிடைக்கப் பெற்றது
முஸ்லிம் பெண்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் 100 வீதம் நிறைவேற்றப்படவில்லை
முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தத்தை நீதி அமைச்சு செய்யும் போது, முஸ்லிம் விவகார அமைச்சுடன் இணைந்து மேற்கொண்டுள்ளமையினாலேயே, இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என மனித உரிமை செயற்பாட்டாளர் ஷெரின் சந்தேகம் வெளியிடுகிறார்.