தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளவும் உயிர்ப்பிக்கும் வகையில் செயற்பட்டார் எனும் குற்றச்சாட்டில், நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கல்முனை பிரிவு முகாம் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பிரதேசத்தில் போட்டோகொப்பி எடுக்கும் வர்த்தக நிலையத்துக்கு சென்றிருந்த அந்த நபர், புலிகள் அமைப்பின் இலட்சனையுடன் அடையாள அட்டையை காண்பித்து, அவ்வாறான அடையாள அட்டைகளை தயாரிக்க முடியுமா? என வினவியுள்ளார்.
அவ்வாறு செய்யமுடியாது என வர்த்த நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார், அதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
உடனடியாக செயற்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், சந்தேகநபர் வந்திருந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்துகொண்டு, அது தொடர்பில் கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முகாமுக்கு அறிவித்துள்ளார்.
அதனையடுத்தே அந்த நபர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 40 வயதான பிள்ளைநாதன் ஆனந்த ராஜா என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.