web log free
February 05, 2026

5 மாணவிகள் துஷ்பிரயோகம் ஆசிரியருக்கு வலை

 

ஐந்து மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அப்பாடசாலையிலேயே கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருக்கு பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.

15, 16 வயதுக்கு உட்பட்ட மாணவிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகள் மட்டுமன்றி, மாணவர் ஒருவரையும் அந்த ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என அறியமுடிகிறது. பொலிஸாரினால் தேடப்படும், 44 வயதுடைய ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

பதுளை ஹாலி-எல, பிரதேசத்துக்கு உட்பட்ட பாடசாலையில், பயிலும் மாணவன், மாணவிகளையே அதே பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர், இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது.

Last modified on Thursday, 29 August 2019 03:39
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd