ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தலைவர்களில் ஒருவரான அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மிகவும் இரகசியமாக சந்தித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடந்த 26ஆம் திகதியன்று சென்றே இவ்வாறு சந்தித்துள்ளார்.
இதன்போதே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்குமாறு ஆவணமொன்றை கையளித்துள்ளார்.
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சரும் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவை நிறுத்துவதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற, சஜித்துக்கு எதிரான தரப்பில் மிக முக்கியமானவராக ரவி கருணாநாயக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.