web log free
November 27, 2024

அமைச்சரவைத் தீர்மானங்கள்...

27.08.2019 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

01. வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா (தனியார்) நிறுவனம் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்து பரிசோதனை செய்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு 


2006.01.01 தினத்திலிருந்து 2018.01.31 திகதி வரையில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா (தனியார்) நிறுவனம் தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பல்வேறு தரப்பினர்களினால் எழுத்து மூலம் மற்றும் வாய் மூலமான முறைப்பாடுகள் மற்றும் ஏனைய தகவல்களை பரிசோதனை செய்து 32 சிபாரிசுகள் அடங்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகளுக்காக கௌரவ சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் என்ற வணிகச்சின்னத்தை இலங்கை புலமைச்சொத்து திணைக்களமாக திருத்தத்தை மேற்கொள்ளல் 


2003ஆம் ஆண்டு இல 36 இன் கீழான புலமைச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்திற்கு இலங்கையில் தேசிய புலமைச் சொத்து கட்டமைப்பை நிருவகிப்பதற்காக முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை நிறைவேற்றுவதற்காக சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களுடன் செயல்படும் பொழுது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் என்ற வணிகச் சின்னத்தை இலங்கை புலமை சொத்து திணைக்களமாக திருத்துவதற்கும் அதற்கமைவாக 2003 ஆம் இல 36 இன் கீழான புலமைச் சொத்து சட்டத்தில் 04(1) சரத்தில் இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகம் என்ற ரீதியில் அடையாளப்படுத்தலை இலங்கை புலமை சொத்து திணைக்களம் என்று திருத்தத்தை மேற்கொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 


03. வெமெடில்ல நீர்த்தேக்கத்தில் உள்வாங்கப்பட்ட காணிக்காக வழங்கப்பட்ட காணி மொரகஹகந்த திட்டத்தின் கிழ் பெற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக இந்த காணி உரிமையாளர்களுக்கு காணிக்காக இழப்பீடு வழங்குதல் 


நாவுல கலேவல மற்றும் தம்புள்ளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெமெடில்ல நீர்த்தேக்க பணிக்காக அரசாங்கம் காணியை பெற்றுக்கொண்ட போது காணியை இழந்த நபர்களுக்கு கந்தேபிடவல திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மாற்றுக்காணியை உள்ளடக்கிய நிலப்பிரதேசம் மொரகஹகந்த களுகங்கை அபிவிருத்தி திட்டத்தின் பணிகளுக்காக பின்னர் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்கப்பட்டது. இதனால் மேற்படி திட்டத்தின் காரணமாக காணியை இழந்ததினால் பாதிப்புக்கு உள்ளான மற்றும் காணிக்கு பதிலாக மாற்றுப் பரிந்துரையாக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்று பின்னர் தெரியவந்தது. மேலும் 4 நபர்களுக்கு இதில் 16 இலட்சம் வீதம் இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்காக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

04. மோதல்களினால் சேதமடைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையாகவும் பகுதியளவில் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைத்தல் 


30 வருட கால யுத்த மோதல் காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்து ஆலயங்களை புனரமைப்பதில் கூடுதலான சந்தர்ப்பங்கள் வடக்கு மாகாண மத பிரபுக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த புனருத்தான பணிகள் தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனரமைப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 200 மில்லியன் ரூபாவை விசேட ஒதுக்கீடுடன் இந்து மத மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை பெற்று மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாகத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு புனரமைப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

05. மாத்தறை தொழில் பயிற்சி மத்திய நிலையமொன்றை அமைப்பதற்காக நிதியுதவியைப் பெற்றுக் கொள்ளல்


கட்டிடம் மற்றும் மோட்டார் வாகன புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல் குளிரூட்டல் மற்றும் காற்று வெப்பக்கட்டுப்பாடு மற்றும் மென்பொறியியல் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு உபசரணை ஆகிய துறைகளில் நிறுவன மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மாத்தறை மற்றும் அதனை அண்டிய மாவட்டங்களில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் நோக்குடன் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இரத்மலானையிலுள்ள இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு சமமான தொழில் பயிற்சி நிறுவனமொன்றை மாத்தறையில் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேவையான பயிற்சி வசதி மற்றும் உபகரணங்கள் உடன் இந்த பயிற்சி மத்திய நிலையத்தை அமைப்பதற்காக 15.7 மில்லியன் யுரோக்கள் நிதியுதவியை ஜேர்மனியின் முகறு (முநசனவையளெவயடவ குரச றுநனைநசயகைடியn) என்ற நிறுவனத்திடம் பெற்றுக் கொள்வதற்கும் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்திற்கு சமமான சுதந்திரமான நிலைமையுடனான உத்தேச மாத்தறை தொழில் பயிற்சி நிறுவனத்தைப் போன்றே கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் பொதுவான வகையில் ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் மூன்றையும் நிர்வகிப்பதற்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சிற்கு அனுமதியை வழங்குவதற்காக நிதியமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைசரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


06. கடன் ஒழுங்குறுத்தல் அதிகார சபையை ஸ்தாபித்தல் 


2016 ஆம் ஆண்டு இல 6 இன் கீழான நுண் நிதி சட்டத்தில் உத்தேச இலக்கை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட நடைமுறை பிரச்சினைகளின் காரணமாக நுகர்;வோர் பாதுகாப்பு மற்றும் வர்த்தக செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தல்களை உள்ளடக்கிய வகையில் இலங்கை பணத்தை கடனுக்கு வழங்கும் பொழுது வர்த்தக ஒழுங்குறுத்தல் மற்றும் கண்காணித்தல் சேமிப்பு வைப்பீட்டை பெற்றுக் கொள்ளாத அனைத்து நுண்நிதி நிறுவனங்கள் அவற்றின் ஒழுங்குறுத்தலுக்கு உள்வாங்குவதற்காகவும் இந்த துறைக்கான அனைத்து தரவுகள் மற்றும் தகவல்களை ஒன்று திரட்டும் நோக்காக்கொண்டு தற்பொழுது நுண்நிதி சட்டத்தை இரத்து செய்து நிதி அமைச்சின் மூலம் நிர்வகிக்கப்படும் வகையில் ஒழுங்குறுத்தல் அதிகாரத்தை கொண்ட சுயாதீன நிறுவனம் என்ற ரீதியில் கடன் ஒழுங்குறுத்தல் அதிகார சபையை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் அமைப்பதற்கு நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


07. வரிச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளல் 


2019 ஆம் ஆண்டு தேசிய வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கும் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக திருத்தங்களை உள்ளடக்குவதற்காகவும் 2002 ஆம் ஆண்டு இல 14 கீழான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி சட்டத்திற்கு, 2009 ஆம் ஆண்டு இல 9 இன் கீழான தேசிய கட்டிட வரி சட்டத்தில் 2006 ஆம் ஆண்டு இல 13 கீழான பொருளாதார சேவை கட்டண சட்டம், 2017 ஆம் ஆண்டு இல 24 இன் கீழான தேசிய வருமான சட்டம் நிதி சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டு இல 40 இன் கீழான பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டத்தில் தேவையான திருத்தத்திற்காக நீதி திருத்த சட்டத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

08. 2011ஆம் ஆண்டு இல 42 இன் கீழான நிதி வர்த்தக சட்டத்தின் 33 ஆவது சரத்தின் கீழ் அனுமதி பத்திரம் பெற்ற நிதி நிறுவனம் ஒன்றை கொடுக்கல் வாங்கலை மேற்கொண்டு மூடிவிடுவதற்கான உரிமைகள் முன்னுரிமை தொடர்பிலான உத்தரவுகள் 


நிதி நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கலை நிறைவு செய்து மூடிவிடும் நடவடிக்கைக்கு வசதி செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு இல 42 இன் கீழான நிதி வர்த்தக சட்டத்தில் 32 ஆவது சரத்தின் கீழ் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அனுமதி பத்திர நிதி நிறுவனமொன்று இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையினால் கொடுக்கல் வாங்கலை நிறைவு செய்து மூடும் பொழுது சொத்துக்களுக்கு உரிமை முதன்மை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி நிதி சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள உத்தரவு நிதி அமைச்சரின் கையெழுத்துடன் 2019.05.31 தினத்தன்று இல 2125ஃ58 என்ற அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்புக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

09. பதுளை ஹாலிஎல எல்ல கூட்டு நீர் வழங்கல் திட்டத்தின் தெமோதா ருஸ்குறு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு காணிகளை பெற்றுக் கொள்ளப்பட்டதினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குதல் 


பதுளை ஹாலிஎல எல்ல கூட்டு நீர் வழங்கல் திட்டத்தின் தெமோதர ருஸ்குறு நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு காணிகளை பெற்றுக் கொண்டதன் காரணமாக இடம்பெயர்ந்த சம்பந்தப்பட்ட காணிகளில் நிலையான உறுதியுள்ள 5 குடும்பங்களுக்கு அவர்கள் குடியிருந்த காணிக்கு தற்பொழுது சந்தை பெறுமதி அடிப்படையிலான இழப்பீட்டையும் குடியிருந்த வீட்டை மீள அமைப்பதற்கான பெறுமதியின் அடிப்படையிலான இழப்பீட்டை வழங்குவதற்கும் இந்த 5 குடும்பங்களுக்கும் திட்டத்தில் கைப்பற்றப்பட்ட காணியை மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு உட்பட்ட பலவந்தமாக குடியிருந்த 15 குடும்பங்கள் அடங்கலாக 20 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்றுக் காணிகளுக்கு காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அனுமதி பத்திரம் (அனுமதிப்பத்திரம்) அல்லது கொடுப்பனவு பத்திரமொன்றை வழங்குவதற்கும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


10. இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை


இலங்கையில் அரச மற்றும் அரசு அல்லாத பிரிவுடன் இணைக்கப்பட்ட உயர்கல்விக்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்துவதன் மூலம் வெளிநாட்டு பரிமாற்றலை நாட்டிற்குள் பெற்றுக் கொள்வதற்கும் இலங்கையின் உயர் கல்விக்கான சந்தர்ப்பத்தை தெற்காசிய வலயத்துக்குள் விரிவுபடுத்துவதற்கும் நீர் வழங்கல் துறையில் பொறியியலாளர்களின் நிபுணத்துவ அறிவை மாலைதீவு அரசாங்கத்திற்கு வழங்குவதன் மூலம் பயன்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை பெற்றுக்கொண்டு இரு நாடுகளுக்கிடையில் நட்புறவு பரஸ்பர புரிந்துணர்வை மேலும் விரிவுபடுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மாலைதீவிற்கு விஜயம் செய்த போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவ குடியரசுக்கிடையில் உயர்கல்வி மற்றும் நீர் வளத்துறையின்; பணிகளுக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவதற்கும் நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை பல் வைத்திய சங்கம் ஏற்பாடு செய்துள்ள 42ஆவது ஆசிய பசுபிக் பல் வைத்திய மாநாடு மற்றும் கண்காட்சி 


இலங்கை பல் வைத்திய சங்கம் ஏற்பாடு செய்துள்ள 42 ஆவது ஆசிய பசுபிக் பல் வைத்திய சம்மேளனத்தின் வைத்திய விஞ்ஞான மாநாடு 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 13அம் திகதி வரையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்காக ஆசிய ஐரோப்பிய பசுபிக் பிராந்தியத்தின் பல நாடுகளைச் சேர்ந்த பல் வைத்தியர்கள் மற்றும் புத்திஜீவிகள் பலர் கலந்து கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதுடன் உலகின் முன்னணி பல்வைத்திய உபகரண மற்றும் பல் பாதுகாப்புக்கிற்கு தேவையான விநியோகிப்பவர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் பல பங்களிப்புடன் சர்வதேச பல் வைத்திய கண்காட்சியும் இதற்கமைவாக நடைபெறவுள்ளது. இதற்கமைய இந்த மாநாடு மற்றும் கண்காட்சி தேசிய முக்கியத்துவத்துடனான செயலமர்வாக பெயரிடுவதற்கும் இதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


12. LED மின்குமிழுக்கான எரிசக்தி செயல் திறன் தரம் 


ஜனாதிபதி செயலணி ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் கோரிக்கையாளர்கள் தரப்பு எரிசக்தி முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் கீழ் செயல்திறன் தன்மை மின்சார உபகரணப் பாவனையை பிரபல்யப்படுத்துவதற்காக மின்சார உபகரணங்களுக்கு தனியான எரிசக்தி செயல் திறன் தரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டுக்குள் பயன்படுத்தப்படும் LED  மின்குமிழ்களுக்காக இருக்க வேண்டிய ஆகக் கூடிய செயற்பாட்டு சாதன தரத்தினை அறிமுகப்படுத்தும் பொழுது மின்குழிழ்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக இலங்கை பேண்தகு எரிசக்தி அதிகார சபை சட்டத்தில் 67 ஆவது சரத்தின் கீழான உத்தரவுகளை அறிமுகப்படுத்துதல் இந்த உத்தரவுகளை அரச வர்த்தமானியில் வெளியிடுதல் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. குறைந்த வருமானத்தைக் கொண்டவர்களுக்கு சீனாவின் நிதியுதவியின் கீழ் 2000 வீடுகளை நிர்மாணித்தல் 


குறைந்த வருமானத்தைக் கொண்ட நபர்களுக்காக சீனா நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 2000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதியுதவிகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இதற்காக மொரட்டுவ, பேலியகொட, திம்பிரிகஸ்ஸாய, மாரகம பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் பேலியகொட மற்றும் மாரகம் மாநகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ள காணியில் நிர்மாணப் பணிகளுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய திம்பிரிகசாய பிரதேச செயலாளர் பிரிவில் தெமட்ட கொட கலாநிதி டெனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள 1 ரூட் 03.77 பேர்சைக் கொண்ட எழுமடுவவத்தை என்று அடையாளப்படுத்தப்படும் அரசாங்கத்தின் காணி அரச காணி கட்டளைச்சட்டத்தின் கீழ் நன்கொடையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்காகவும் மொரட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் பெட்டரிவத்தை தெலவல மாவத்தையில் உள்ள 3 ஏக்கர் 3 ரூட் 08.84 பேர்ச் காணியை பெற்றுக் கொள்வதற்கும் இந்த காணி அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காகவும் மாநகர மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. இலங்கை மற்றும் அங்கேரியாவிற்கு இடையில் இருதரப்பு விமான சேவை உடன்படிக்கை 


2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற சர்வதேச சிவில் விமான சேவை இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தை மகாநாட்டின் போது இலங்கை மற்றும் அங்கேரியா நாடுகளுக்கு இடையில் விமான சேவை தொடர்பாக அரசாங்கங்கள் இரண்டின் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று தயாரிக்கப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு இரண்டு நாட்டு அதிகாரிகளினால் உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கமைவாக இலங்கை மற்றும் அங்கேரிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த விமான சேவை உடன்படிக்கை இலங்கை அரசாங்கத்தின் அதிகாரத்தைக் கொண்ட பிரதிநிதியொருவரினால் கைச்சாத்திடுவதற்கும் அதனைத் தொடர்ந்து உடன்படிக்கையை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


15 குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட குற்றங்கள் தொடர்பில் தண்டப் பணத்தை அதிகரித்தல்


நாட்டிற்குள் குற்றச்செயல்கள் தொடர்பான சம்பவங்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரிப்பதினால் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும். இதனால் சில சட்டங்களிலும் கட்டளைச்சட்டங்களிலும் உள்ளடங்கியுள்ள ஒழுங்கு விதிகளை மீறுவது தொடர்பில் விதிக்கப்படும் தண்டப்பணம் அதனை மீறுவதை தடுப்பதற்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லாமை தொடர்பாக மதிப்பீடு செய்து சிபாரிசை சமர்ப்பிப்பதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் சிபாரிசுக்கமைவாக குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பிலான தண்டப்பணத்தை அதிகரிப்பதற்காக சட்ட திருத்தத்தை மேற்கொள்ளுமாறு சட்ட வரைவு பிரிவிற்கு ஆலோசனை வழங்;குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16 ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி வழங்கப்பட்ட பேண்தகு நகர அபிவிருத்தி திட்டத்தின் பெகேஜ் 1: (பொதி) ஒன்று குருநாகல் இரத்தினபுரி தம்புள்ளை திருகோணமலை ஆகிய நகரங்களில் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துத்துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டம் மற்றும் பெறுகை பணிகளை மேற்கொள்வதற்காக ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் 


பேண்தகு நகர அபிவிருத்தி திட்டத்தின் தொகுதி பெகேஜ் ஒன்றின் கீழ் குருநாகல் இரத்தினபுரி தம்புள்ளை திருகோணமலை ஆகிய நகரங்களில் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் போக்குவரத்து துறையை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டம் மற்றும் பெறுகை பணிகளுக்காக ஆலோசனை ஒப்பந்தத்தை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாடு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக் குழுவின் சிபாரிசின் அடிப்படையில் ளுஆநுஊ ஐவெநசயெவiயெட Pஎவ டுவன. யுரளவசயடயை துஏ றiவா ளுரசடியயெ துரசழபெ ஐகெசயளவசரஉவரசந Pவந. டுவன.(ளுடுஐPடு). ளுiபெயிழசந யனெ ளுரடி-உழளெரடவயவெள(Pஎவ) டுவன.இ ளுசi டுயமெய நிறுவனத்திடம் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

17 ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் பேண்தகு நவநாகரீக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பொதி –பெகேஜ் 2 குருநாகல், இரத்தினபுரி தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நகர வசதிகளை மேம்படுத்துதல் மரபுரிமைகளை பாதுகாத்தல் நகர்ப்புற வளர்ச்சிக்கான விரிவான திட்டம் மற்றும் பெறுகை பணிகளை மேற்கொள்வதற்காக ஆலோசகர்களை இணைத்து கொள்வதற்கான ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 63ஆவது விடயம்)
பேண்தகு நகர அபிவிருத்தி திட்டத்தில் பொதி – பெகேஜ் 2 குருநாகல் இரத்தினபுரி தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நகர வசதிகளை மேம்படுத்துதல் மரபுரிமைகளை பாதுகாத்தல் நகர்ப்புற அபிவிருத்திக்கான திட்டமிடப்பட்ட பெறுகை பணிகளுக்காக ஆலோசனை உடன்படிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கியின் உடன்பாடு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை பெறுகைக்குழுவின் சிபாரிசின் அடிப்படையில் நுபெiநெநசiபெ ஊழளெரடவயவெள டுவனஇ ளுசi டுயமெய (டுநயன ஊழளெரடவயவெள) துஏ றiவா முநுஐழுளு ளுசi னுநஎநடழிஅநவெ ஊழளெரடவiபெஇ ஐவயடல என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18 இலங்கை ரயில் சேவைக்காக 5000 தண்டவாளங்களை பெற்றுக் கொள்ளல் 


இலங்கை ரயில் சேவைக்காக நுn 45 நுஐ (45'00') சு 260 – நுN13674 சுற்றளவிலான 5000 தண்டவாளங்களை பீலிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக் குழுவின் சிபாரிசு அடிப்படையில் அமெரிக்க டொலர் 2320.230 தொகையை ஆஃளு யுபெயபெ புசழரி ஐவெநசயெவழையெட Pயணொihரய ஊழ.டுவன. நிறுவனத்திற்கு வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19 தொழில் பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை 


மாலைதீவு அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் தொழில் பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டுவதற்காகவும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக மாலைதீவின் குடியரசின் இலங்கைக்கான தூதுவருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20 மாலைதீவு குடியரசு அரசாங்கம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கிடையில் விசா ஒழுங்கு விதிகளை இலகுபடுத்துவது தொடர்பான உடன்படிக்கை 


மாலைதீவு குடியரசு அரசாங்கம் மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசாங்கத்திற்கு இடையில் விசா ஒழுங்குவிதிகளை இலகு படுத்துவது தொடர்பான உடன்படிக்கையை எட்டுவதற்கும் அதன் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திடுவதற்கு உள்ளக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21 ஜப்பான் திட்டமல்லாத நன்கொடையின் கீழ் பொதுமக்களை பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் பயங்கரவாத தடுப்பு பணிகளுக்காக ஜப்பான் 1 பில்லியன் நிதியுதவி 2019 - 

உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மூலம் இலங்கை மக்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட பாதகமான நிலைக்கு உடனடி பெறுபேறாக ஜப்பான அரசாங்கத்தினால் 1 பில்லியன் ஜப்பானிய யென்கள் (முதலீட்டு ரீதியில் 1.6 பில்லியன் ரூபா) திட்டமல்லாத நன்கொடையின்; கீழ் இலங்கை பொலிஸ் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை இலங்கை ஸ்ரீலங்கா நிறுவனத்திடம் பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பான ஆற்றலை மேம்படுத்துவதற்காக பயிற்சி உபகரணங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் ஊடாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நன்கொடையை பெற்றுக் கொள்வதற்காக பரிமாறல் ஆவணம் ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22. மாலைதீவு அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல்


இலங்கை முதியோர் சமூகத்தின் சுதந்திரம் புகலிடம் புரிந்துணர்வு அபிமானத்தை ஏற்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டத்தின் மூலம் இவர்களை ஊக்குவித்தல,; முதியோரை பாதுகாப்பதற்குத் தேவையான பங்களிப்பை வழங்குதல், ஊனமற்ற நபர்களின் தொழில் ஆற்றலை மேம்படுத்துதல், அவர்கள் சுதந்திர பிரஜைகளாக மேம்படுத்துதல் போன்ற பணிகளை செயல்திறன் மிக்கதாகவும் பயனுள்ள வகையில் மேற்கொள்ளுதல், சிறுவர்கள், மகளீர், வயதான மற்றும் ஊனமுற்ற நிலையில் உள்ள நபர்களின் உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்கும் நோக்குடனான மாலைதீவு அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்காக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 

Last modified on Thursday, 29 August 2019 03:07
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd