ஜப்பான் திட்டமல்லாத நன்கொடையின் கீழ் பொதுமக்களை பாதுகாத்துக் கொள்ளல் மற்றும் பயங்கரவாத தடுப்பு பணிகளுக்காக ஜப்பான் 1 பில்லியன் நிதியுதவி வழங்கவுள்ளது அதற்கான அங்கீகாரம் அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மூலம் இலங்கை மக்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்ட பாதகமான நிலைக்கு உடனடி பெறுபேறாக ஜப்பான அரசாங்கத்தினால் 1 பில்லியன் ஜப்பானிய யென்கள் (முதலீட்டு ரீதியில் 1.6 பில்லியன் ரூபா) திட்டமல்லாத நன்கொடையின் கீழ் வழங்கவுள்ளது.
இலங்கை பொலிஸ் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை இலங்கை ஸ்ரீலங்கா நிறுவனத்திடம் பயங்கரவாத செயற்பாடுகளை தடுப்பது தொடர்பான ஆற்றலை மேம்படுத்துவதற்காக பயிற்சி உபகரணங்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் ஊடாக வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த நன்கொடையை பெற்றுக் கொள்வதற்காக பரிமாறல் ஆவணம் ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடுவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.