ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், கடந்த 27ஆம் திகதி இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சில விடயங்களுக்கு இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என சிங்கள பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தற்போதைக்கும் இரத்துச்செய்யாமல் இருப்பதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியை அமைப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில்,இவ்விருவர் மட்டுமே கலந்துகொண்டிருந்துள்ளனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.