கொழும்பு, மருதானையிலிருந்து காலியை நோக்கி பயணித்த ரயிலில், லொறியொன்று மோதியதில், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் சென்றுகொண்டிருந்த, செங்கல்கற்களை ஏற்றிச்சென்ற லொறியே, பின்னால் செலுத்தப்பட்டபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வௌ்ளவத்தைக்கும் தெஹிவளைக்கும் இடையில் இடம்பெற்ற இவ்வனர்த்தினால், கரையோர ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.