web log free
July 02, 2025

ஓடி வந்த சஜித்துக்கு ஒரு மணிநேரம் அறிவுரை

பிரதமர் அலுவகத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து, தன்னுடைய வைபவங்களை அனைத்தையும் இடைநடுவிலேயே கைவிட்டுவிட்டு, எம்பிலிப்பிட்டியவிலிருந்து மிகவேகமாக கொழும்புக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ திரும்பினார்.

அலரிமாளிகைக்கு இன்றிரவு 8 மணிக்கு வருகைதந்த அவருக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் தனியறையில் மிக முக்கியமான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில், சஜித்துக்கு ரணில் நீண்ட அறிவுறை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் வரையிலும் ஜனாதிபதி வேட்பாளரை தான் அறிவிக்கமாட்டேன் எனவும், தான்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று பிரசாரப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.

இவற்றுக்கெல்லாம் இன்றுதான் பதில் கிடைக்கும் என அறியமுடிகின்றது. 

Last modified on Saturday, 31 August 2019 14:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd