கொழும்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, கடுமையாக கோபமடைந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அந்த பெரமுனவின் உறுப்பினர்களுக்கு கடுமையான அறிவுரை வழங்கியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாரும் எதுவும் வாய்த்திறக்க கூடாது, கட்டுக்கோப்புடன் செயற்படவேண்டும்.
ஏனைய கட்சிகளை விமர்சிக்கும் போது, மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
குறிப்பாக சிறுப்பான்மை கட்சிகள் தொடர்பில் வாயை திறக்கவே வேண்டாம்.
அதிலும், அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் தொடர்பில் எவ்விதமான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளார் என அறியமுடிகின்றது.
அவ்விருவரும் கடந்த காலங்களில் எங்களுக்கு ஆதரவளித்தவர்கள், எதிர்காலத்திலும் ஆதரவளிக்கக் கூடும் என்பதனால், வாயை அடைத்து வாசிக்குமாறு அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.