web log free
February 05, 2026

மூடிய கடிதவுறை மைத்திரியிடம் கையளிப்பு

முக்கிய தீர்மானம் அடங்கிய மூடிய கடிதவுறை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அந்த கடிதவுறையை ஜனாதிபதி இன்னும் திறந்து பார்க்கவில்லை என்றும், அதனை பாராளுமன்றத்துக்கு எதிர்வரும் 2ஆம் திகதியன்று அனுப்பிவைப்பதற்கு அவர் உத்தேசித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அந்த மூடிய கடிதவுறையில் என்ன இருக்கிறது என்பது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவே, பாராளுமன்றத்துக்கு எதிர்வரும் 3ஆம் திகதி அறிவிப்பார். ஜனாதிபதியின் அறிவிப்பின் போதே அறிவிப்பார் என அறியமுடிகின்றது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமையை கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டிருந்தார்.

அந்த விளக்கம் தொடர்பில், உயர்நீதிமன்றத்தில் கடந்த 23ஆம் திகதி ஆராயப்பட்டது. 

அதற்கான உத்தரவே, ஜனாதிபதிக்கு 30ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. 

Last modified on Saturday, 31 August 2019 03:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd