web log free
April 06, 2026

நூலிழையில் தப்பியது கார்

 

ரயில் இலாவகமாக மோதுண்ட காரொன்று நூலிழையில் தப்பிய சம்பவமொன்று நீர்கொழும்பு- கொழும்பு ரயில் தண்டவாளத்தில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு கல்கந்த சந்திக்கு அருகில் ஐஸ் தொழிற்சாலைக்கு செல்வதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள நுழைவாயிலில், பாதுகாப்பற்ற ரயில் கடவைக்குள் நுழைவதற்கு முனைந்த காரொன்ரே, ரயிலில் மோதுண்டுள்ளது.

அந்த காரின் சாரதிக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், பாரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

நேற்றுப்பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், குளியாப்பிட்டிய காப்புறுதி முகாமையாளரே உயிர் தப்பியுள்ளார என தெரிவித்த நீர்கொழும்பு போக்குவரத்துப் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd