இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், தனது பழைய அரசியல் பாணியில் கொட்டகலையில் நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளார்.
தொண்டமானின் பணிப்பின் பேரில், கொட்டக்கலை விளையாட்டு மைதானத்துக்கு பின்புறமாகவுள்ள வீடுகளின் ஒரு பகுதி, இடித்து உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.
கொட்டக்கலை பிரதேச சபையினால் இவை, ஓகஸ்ட் 31ஆம் திகதி உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு மைத்தானத்துக்கு வந்திருந்த ஆறுமுகன் தொண்டமானும் அவருடைய ஆதரவாளர்களும், என்னுடைய வீட்டின் மேல் பகுதி, அதனோடிணைந்த சுவர்கள் ஆகியவற்றை அடித்து, இடித்து நொறுக்கியுள்ளனர்.
தொண்டமானும் அவர் தலைமையில் வந்திருந்தோரும் பேயாட்டமொன்றை ஆடிவிட்டு சென்றுவிட்டனர் என அந்த கட்டிடத்தின் உரிமையாளர் தியாகராஜா பாஸ்கரன் தெரிவித்தார்.
என்னுடைய கட்டிடத்தை போலவே, காங்கிரஸின் ஆதரவாளர் ஒருவரின் கட்டிடம் மைதானத்தை பார்த்துகொண்டிருக்கின்றது.அந்த கட்டிடடத்துக்கு எவ்விதமான சேதங்களும் விளைவிக்கப்படவில்லை என பாஸ்கரன் மேலும் தெரிவித்தார்.
பெக்கோ, இயந்திரத்துடன் வந்தே, அன்றிரவு 8 மணியளவில் இரவோடு இரவாக, கட்டிடத்தை உடைத்து நொறுக்கியுள்ளனர் என பாஸ்கரன் மேலும் தெரிவித்துள்ளார்.
கொட்டக்கலை மைத்தானத்துக்கு அருகிலிருந்த சட்டவிரோதமான கட்டிடங்களை உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன என, கொட்டக்கலை பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.