இலங்கையில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு, ஒத்துழைப்பு வழங்குவதற்கு பிலிப்பீன்ஸ் இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்காக, வழங்க வேண்டிய உபகரணங்கள் தொடர்பிலான ஆலோசனை சேவையை கண்டறிவதற்காக, பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த விசேட குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளவு.
இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், பிலிப்பீன்ஸ் விஜயத்தின் போது கிடைத்த மற்றுமொரு பெறுபேறாகும்.
ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு பிலிப்பீன்ஸுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினர், தங்களுடைய விஜயத்தை முடித்துகொண்டு, நேற்றிரவு நாடு திரும்பினர்.