கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் என அறியப்பட்ட சஹ்ரானின் நான்கு வயதான புதல்வியை, சஹ்ரானின் மனைவியின் உறவினர்கள் அல்லது சஹ்ரானின் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தாலும் அந்த குழந்தை தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மாதமொரு தடவை அக்குழந்தை தொடர்பில் அறிக்கையிடுமாறும் நீதவான், சி.ஐ.டியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தற்கொலைத்தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட சஹ்ரானின் மனைவி, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.