சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழுவால், தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ள எனவும் அதற்கான தகவல்கள் கிடைத்துள்ள என்றும் அரச புலனாய்வுச் சேவையின் ஊடாக, 97 தடவைகள், எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தன 2017, 2018, 2019ஆம் ஆண்டுகளில், அரச புலனாய்வுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி திலன ஜயவர்தனவால் இவை முன்வைக்கப்பட்ட என, ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன தெரிவித்தார். உயர்நீதிமன்றத்தில் இன்று (03) நடைபெற்ற அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்குச் செயற்படாமையின் ஊடாக, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தி, தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணையின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.