இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (05) கறுப்பு நாள் என்று, தெரிவித்தமையால் சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் வாய்மூல வடைக்கான வினாக்கள் நேரத்தில் 15 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் ஒரு கேள்விக்கும் பதிலளிப்பதற்கு அமைச்சர்கள் இருக்கவில்லை. இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிக்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, ஆளும் கட்சி உறுப்பினர்களும் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.
இதுதொடர்பில் கருத்துரைத்த ஜே.வி.பியின் எம்.பியான பிமல் ரத்னாயக்க, “சபைக்கு இன்று கறுப்பு நாள்” என்றார். “கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு உரிய அமைச்சர்கள் வந்திருக்கவேண்டும். இதை தானும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே, உறுப்பினர்கள் அனைவரும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.