web log free
February 05, 2026

மனைவியுடன் சென்று கருவை சந்தித்தார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று, சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

நாட்டு நடப்பு, ஜனாதிபதி வேட்பாளர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இருவரும் சில மணிநேரம் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் எவ்விதமான தீர்மானங்களும் எட்டப்படவில்லை என அறியமுடிகின்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தன்னுடைய மனைவியுடன் சென்றிருந்தார் என அறியமுடிகின்றது. 

Last modified on Friday, 06 September 2019 03:30
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd