web log free
April 06, 2026

கஜதீர எம்.பி காலமானார்

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.
 
மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர இன்று (06) மாலை காலமாகியுள்ளார்.


அவர் தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் காலமானதை அடுத்த அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக உள்ளது.

எனவே, மாத்தறை மாவட்ட tவிருப்பு வாக்குகளின் அடிப்படையில் இவருக்கு அடுத்தாக லக்ஷமன் யாபா அபேவர்தன இருப்பினும், அவர் தற்போது தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்தில் உள்ளார்.

இதனால் அவருக்கு அடுத்து உள்ள மனோஜ் சிறிசேனவிற்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாவதற்கான வாய்ப்பு உள்ளதுடன் இது தொடர்பில் அவரது நிலைப்பாடு என்னவென தெரியவில்லை.
 
 
 
 
Last modified on Friday, 06 September 2019 15:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd