web log free
March 15, 2026

மருதானையில் தீவிபத்து

கொழும்பு, மருதானை, டார்லி வீதியின், வித்தியாலங்கார மாவத்தையில் உள்ள வீடொன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த இடத்துக்கு கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தீ விபத்தில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரையில் தெரியவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd