web log free
November 27, 2024

தங்கத்தை விழுங்கும் எம்.பிக்கள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் சாப்பாடு தொடர்பில், சபையில் நேற்று வெள்ளிக்கிழமை, மிகவும் ருசிக்கக்கூடிய கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டன.

இதனால், சிலர் விழிப்பிதுங்கியும் இருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான மரிக்கார், மாதத்தில் எட்டு நாட்கள் சபையமர்வுகள் நடைபெறுகின்ற போதிலும், மூன்று வேளை உணவு இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என ஏற்கனவே கூறியிருந்தார். 

இதேவேளை, பதுளை மாவட்ட எம்.பியான சமிந்த விஜேசிறி, ” எம்.பிகளுக்கு வழங்கும் உணவுவேளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்” என்றார். 

எடுத்த எடுப்பிலேயே அப்படி செய்ய இயலாது. சகல உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுடனேயே அதனை செய்யமுடியும் என சபாநாயகர் பதிலளித்தார். 

மரிக்கார்- பாராளுமன்றத்தின் செலவு தொடர்பில் ஊடகங்கள் அறிக்கையிடுகின்றன. 

பாராளுமன்ற செலவை பார்த்து, நாங்கள் தங்கத்தை விழுங்குவதாகவே மக்கள் தெரிவிக்கின்றனர். 

பாராளுமன்றத்தில் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.  சபை அமர்வு நாட்களில், அரச அதிகாரிகள் 800 அல்லது 900 பேர் வருகின்றனர். ஊடகவியலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் செலவாகும். 

சபாநாயகர்- இதுவும் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மரிக்கார்- இதனைவிடவும் மிகவும் விவரமான தகவல்கள் முன்வைக்கவேண்டும். 

மஹிந்த அமரவீர- இது எங்களுடைய 225 பேரின் பிரச்சினையாகும். எங்களால் வீதியில் இறங்கிச் செல்லமுடியாது. நாங்கள் சீரழிக்கும் குழுவாகவே இருக்கின்றோம். எங்களை அப்படிதான் பார்க்கின்றனர். ஆகையால், சபாநாயகர் அவர்களே, நீங்கள் விளக்கத்துடன் கூடிய அறிக்கையை தயாரிங்கள். 

ஒரு சாப்பாட்டுக்கு எவ்வளவு செலவாகிறது. எம்.பிகளுக்கு எவ்வளவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது, ஏனையவர்களுக்கு எவ்வளவு செலவாகிறது. சபை்பாடு கொடுக்கப்படுகிறதா? இல்லை உள்ளிட்ட விவரங்களுடன் முழுமையான அறிக்கையை தயாரிக்குமாறு கோரின்றார். 

நாங்கள் சாப்பிட்டவுடன் 250 ரூபாய் கொடுக்கின்றோம். எங்களுடன் விருந்தினர் வந்து உணவை உட்கொட்டால், அவருக்கான 650 ரூபாயை கழித்துகொள்கின்றேன். 

ஆனால், ஏனையோருக்கு அவ்வாறில்லை. ஒருவருக்கு 2 ரூபா 50 சதம், 5 ரூபா, 7 ரூபா 50 சதம் ஆகிய விலைகளுக்கும் சாப்பாடு கொடுக்கப்படுகின்றது. இதுதொடர்பில் விவாதிப்பதற்கு நாளொன்றை ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டார். 

மரிக்கார்- எங்களுக்கு விசேட சாப்பாடு வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும், வீட்டில் கிடைக்கும் ஒருவேளை சாப்பாடு இதனை விடவும் மேலானது. 

நிமல் லன்சா- நான் கோப்பி மட்டுமே குடிப்பேன், அந்த குற்றச்சாட்டு எம்மீதும் திணிக்கப்படுகின்றது. நாங்கள் 250ரூபா கொடுத்து, 250 ரூபாவுக்கும் சாப்பிடமாட்டோம்.  இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளமுடியாது. 

எங்களை சேர்ந்தவர்கள், மாதத்துக்கு 16 அல்லது 17 இலட்சம் ரூபாவை மக்களுக்காக செலவிடுகின்றனர். எங்களுக்கு கிடைப்பதோ, இரண்டரை இலட்சம் ரூபாய் மட்டுமேயாகும். அதனை தெளிவுப்படுத்தவேண்டும் என்றார். 

வாசுதேவ நாணயக்கார- இந்த சீடீயை வழங்குவதற்கான செலவுக்குப் பதிலாக, புத்தகங்களை கொடுத்தால், எங்களுக்கு பிரயோசனமானதாக இருக்கும். அந்த செலவும் இதிலேயே உள்ளடங்குகின்றது என்றார். 

சபாநாயகர்- இவை தொடர்பில் நாங்கள் கலந்து தீர்மானிப்போம்.

சமிந்த விஜயசிறி- பாடசாலை மாணவர்கள் வருகின்றனர். மக்களும் வருகின்றனர். உறுப்பினர்களுக்கு வழங்கும் சாப்பாட்டை நிறுத்திவிட்டு, பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு வருவோருக்கு அவற்றை வழங்கமுடியும்.

எம்.பிக்களுக்கான சாப்பாட்டை நிறுத்திவிட்டு, மாணவர்களுக்கும், பார்வையிட வருவோருக்கும் அந்த சாப்பாட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

சபாநாயகர்- அது இயலாத காரியமாகும். இவர்கள் அனைவரும் சாப்பாடு சாப்பிடவேண்டும். 

ஆகையால், பிரதான நடவடிக்கைகளுக்கு செல்வோம் என்றார்.

Last modified on Saturday, 07 September 2019 03:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd