web log free
November 27, 2024

விஜயகலாவின் காதுகளில் சங்கதி ஊதினார் ரணில்

யாழ்ப்பாணத்தில் பல்வேறான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் முக்கியஸ்தரும், ரணிலின் வலது கைகளில் ஒருவருமான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் முக்கியமான தகவலொன்றை தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்பது தொடர்பிலான சர்ச்சைக்கு இன்னும் முற்றுப்புள்ளி வைக்கப்படா நிலையில், பிரதமருக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளை ஞாயிறுக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண மாநகர நகர மண்டபத்துக்கான  நிரந்தரக் கட்டடத்துக்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாட்டி வைத்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த பிரதமர் யாழ். மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற நிகழ்விலேயே குறித்த அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

230 கோடி ரூபாய் செலவில் மாநகர மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது.ந

நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் நகர அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதே, சங்கதியொன்றை சொல்லியிருக்கிறார்.

யார் எவ்வாறான பிரசாரத்தில் ஈடுபட்டாலும், கட்சியின் தலைவரும் செயற்குழுவின்முடிவே இறுதியாகும். அதனடிப்படையில், தானே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர். அதற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர் மங்கள சமரவீர இருக்கும் போதே, மிக இரகசியமாக இந்தத் சங்கதியை விஜயகலா மகேஸ்வரனின் காதுகளில் ரணில் ஊதியுள்ளார்.

Last modified on Saturday, 07 September 2019 12:36
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd