பாம்பென்றால் படையே நடுங்கும். ஆனால், இந்தியாவில் விஷ பாம்புகளை சாதாரணமாக கைகளில் விடித்து, காட்டுக்குள் விடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ஒரு தலை பாம்பை கண்டாலே, ஓட்டமெடுக்கும் நம்மவரும் இருக்கதான் செய்கின்றனர்.
இதில் இரண்டை தலை பாம்பு வேற போங்க,
இரண்டை தலைகள் கொண்ட பாம்பு, இங்கல்ல கண்டுப்பிடிக்கப்பட்டது அது, இந்தோனேசியாவில்.
இந்தோனேசியா பாலித் தீவிலிருக்கும் ஒரு கிராமத்தில் இரட்டைத் தலைப் பாம்பு கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிராமவாசி ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது தரையில் அதைக் கண்டிருக்கிறார்.
பாலி இந்துக்களின் பாரம்பரிய படையல் சடங்குக்கான வாழை இலையில் அந்தச் சிறிய பாம்பு ஊர்ந்து செல்வதைக் காணொளி காட்டுகிறது.
அது எந்த வகைப் பாம்பு, நச்சுத்தன்மை கொண்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.