ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நாளை ஞாயிறுக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்ற நிலையில், சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதனடிப்படையில், இருவருக்கும் இடையில் மூடிய அறையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
பேச்சுவார்த்தை நிறைவின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அத்துடன், பேச்சுவார்த்தையின் போது, ஒலிப்பதிவு சாதனங்கள் கொண்டுவருவதற்கு தடை. அதுமட்டுமன்றி, செல்போனும் கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் பின்னர் கூட்டறிக்கையொன்றை கட்சியின் சார்பில் வெளியிடப்படும்.
அவ்விருக்குமான பேச்சுவார்த்தையின் பின்னர், அலரிமாளிகையில் நேற்று (8) சந்தித்த குழுவினர், பிரதமர் ரணில், அமைச்சர் சஜித்துடன் ஒன்றாக கலந்துரையாடுவர்.
அவற்றுக்குப் பின்னரே, கூட்டறிக்கை விடுக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன